மாவட்டத்தை குளிர்வித்த மழை

விருதுநகர்: விருதுநகர் மாவட்டத்தில்நேற்று முன்தினம் மதியத்திற்கு மேல் பரவாலக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழல் ஏற்பட்டது.

மாவட்டத்தில் அதிகபட்சமாக கோவிலங்குளம் 57.40 மி.மீ., ராஜபாளையம் 38 மி.மீ., பெரியாறு பிளவக்கல் 24.60 மி.மீ., வத்திராயிருப்பு 20 மி.மீ., காரியாபட்டி 8.60 மி.மீ., விருதுநகர் 7.40 மி.மீ., ஸ்ரீவில்லிப்புத்துார் 1.10 மி.மீ., என மொத்தம் 157.10 மி.மீ., மழை பெய்தது. சராசரியாக 13.09 மி.மீ., மழை பதிவானது.

வெயிலின் தாக்கத்தால் வாடிய மக்கள் திடீரென பெய்த மழையால் மகிழ்ந்தனர்.நேற்று மழை பெய்யாத போதும் வெயிலின் தாக்கம் குறைந்து குளிர்ந்த காற்று வீசியது.

ஸ்ரீவில்லிபுத்தூரில் நேற்றிரவு 7:45 மணிக்கு மேல் பலத்த இடி, மின்னலுடன் கனமழை பெய்ததில் பஸ் ஸ்டாண்ட், பெரிய மாரியம்மன் கோயில் உட்பட பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கியது.

Advertisement