அங்கன்வாடி ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்..

விருதுநகர்: விருதுநகரில் தமிழ்நாடு ஐ.சி.டி.எஸ்., ஊழியர்,உதவியாளர் சங்கம் சார்பில் அடிப்படை ஊதியம் ரூ.11,100 வழங்குவது, குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.6750 வழங்குவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது.

மாவட்ட பொருளாளர்தமிழரசி தலைமை வகித்தார். வட்டார செயலாளர் உதயக்குமாரி, இணை செயலாளர் தனலட்சுமி முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் சித்ரா, அரசு ஊழியர் சங்க முன்னாள் மாநில துணை தலைவர், மாநில பொருளாளர் மோகன வல்லித்தாயார் பேசினார்.

Advertisement