ஓய்வூதியர்கள்  ஆர்ப்பாட்டம் 

விருதுநகர்: பா.ஜ., அரசு, ஓய்வூதியர்களின் நலன்களைப் பாதிக்கும் வகையில் பென்சன் சட்ட திருத்த மசோதாவை லோக்சபாவில் தாக்கல் செய்துள்ளதை ரத்து செய்ய வலியுறுத்தி விருதுநகரில் அனைத்து பி.எஸ்.என்.எல்., ஓய்வூதியர்கள் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

நிர்வாகி வைரமணி தலைமை வகித்தார். துவக்கி வைத்து நிர்வாகி கருப்பையா பேசினார். கோரிக்கைகளை விளக்கி ஏ.ஐ.பி.டி.பி.ஏ., மாவட்டதலைவர் செல்வராஜ், மாவட்ட செயலாளர் புளுகாண்டி, எஸ்.என்.பி.டபுள்யூ.ஏ., மாவட்ட செயலாளர் கோவிந்தராஜ், ஜெபக்குமார் பேசினர்.

Advertisement