டிராக்டர் மோதி முதியவர் பலி

திருவாடானை: திருவாடானை அருகே கே.கிளியூர் சண்முகம் 71. நேற்று முன்தினம் இரவு திருவாடானைக்கு சென்று விட்டு டூவீலரில் கிளியூரை நோக்கி சென்றார்.

வாணியேந்தல் பஸ்ஸ்டாப் அருகே சென்ற போது டிராக்டர் மோதியதில் காயமடைந்தவர் திருவாடானை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல் சிகிச்சைக்காக மதுரை கொண்டு செல்லும் வழியில் சண்முகம் இறந்தார். டிராக்டரை ஓட்டிச் சென்ற 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்து உரிமையாளரை தேடிவருகின்றனர்.

Advertisement