ஆக்கிரமிப்பு கடைகளால் விபத்து: 4 பேர் காயம்

ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் அருகே மண்டபத்தில் சாலை ஓரம் ஆக்கிரமித்த கடையில் நின்ற கார் மீது மற்றொரு கார் மோதியதில் 4 பேர் காயமடைந்தனர்.
கேரள மாநிலம் கோட்டயத்தை சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் 5 பேர் காரில் ராமேஸ்வரம் கோயிலுக்கு வந்தனர். இவர்கள் நேற்று மதியம் ராமேஸ்வரம் செல்லும் முன்பு மண்டபத்தில் ரோட்டோர ஆக்கிரமிப்பு கடை முன்பு காரை நிறுத்தி குளிர்பானம் அருந்தினர்.
அப்போது ஈரோட்டை சேர்ந்த முருகேசன் 52, உறவினர்கள் 5 பேருடன் காரை ஒட்டிக்கொண்டு ராமேஸ்வரம் வந்தார். திடீரென கார் கட்டுப்பாட்டை இழந்து ரோட்டோரம் நிறுத்தி இருந்த கேரளா கார் மீது மோதியது.
இதில் முருகேசன், கேரளா பயணிகள் மூவருக்கு லேசான காயம் ஏற்பட்டது. இதுகுறித்து மண்டபம் போலீசார் வழக்கு பதிந்து காயம் அடைந்த 4 பேரையும் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பினர்.
மண்டபம், பாம்பன் இடையே தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் சிலர் அத்துமீறி ஆக்கிரமித்து குளிர்பானம், ஸ்நாக்ஸ் விற்கின்றனர். இதனால் இங்கு அடிக்கடி விபத்துகள் ஏற்படுகிறது. ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும்
-
'தேர்தல் பத்திர நிதியை பறிமுதல் செய்ய உத்தரவிட முடியாது'
-
இந்திய அணியில் இடம் * சாய் சுதர்சன் இலக்கு
-
கனடா கேப்டன் கைது * கஞ்சா வழக்கில்...
-
இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்