பங்குனி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவக்கம்

திருப்புல்லாணி: திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவ விழா கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருப்புல்லாணி ஆதி ஜெகநாத பெருமாள் கோயிலில் பங்குனி பிரம்மோற்ஸவத்தை முன்னிட்டு கோயில் வளாகத்தில் ஹோம வேள்விகள் வளர்க்கப்பட்டது. நேற்று காலை 10:30 மணிக்கு

கொடி மரத்திற்கு சிறப்பு அபிஷேக அலங்கார தீபாராதனைகளை கோயில் ஸ்தானிகப் பட்டாச்சாரியார்கள் செய்தனர்.

கொடி மரத்தில் கொடி பட்டம் ஏற்றப்பட்டு சிறப்பு தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டது. கொடி மரத்தைச் சுற்றிலும் தர்ப்பைபுற்கள் கட்டப்பட்டு மலர் மாலைகளால் அலங்கரிக்கப்பட்டது.

ஏப்.,8 இரவு 7:00 முதல் 8:30 மணிக்குள் கல்யாண ஜெகநாத பெருமாளுக்கு திருக்கல்யாண உற்ஸவம் நடக்கவுள்ளது. ஏப்.,11ல் காலை 9:00 மணிக்கு மேல் திருப்புல்லாணி நான்கு ரத வீதிகளிலும் பக்தர்கள் வடம் பிடித்து இழுக்க கூடிய பெரிய தேரோட்டம் நடக்க உள்ளது.

தொடர்ந்து பத்து நாட்களும் பல்வேறு வண்ண அலங்கார வாகனங்களில் உற்ஸவமூர்த்தி புறப்பாடு நடக்க உள்ளது. ஏற்பாடுகளை திவான் பழனிவேல் பாண்டியன், சரக பொறுப்பாளர் கிரிதரன் மற்றும் சமஸ்தான நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

Advertisement