கோயில் அருகே குப்பையில் தீ வைப்பதால் புகை மூட்டம்

திருவாடானை: திருவாடானை அருகே திருவெற்றியூரில் பாகம்பிரியாள் கோயில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக் கோயிலில் அன்னதானம் திட்டம் உள்ளது.

பக்தர்கள் சாப்பிடும் இலை மற்றும் பயன்படுத்தப்பட்ட குப்பையை கோயில் அருகே கொட்டப்பட்டு தீ வைப்பதால்புகை மூட்டமாக உள்ளது.

திருவெற்றியூர் மக்கள் கூறியதாவது:

ஹிந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான இக்கோயிலுக்கு பக்தர்கள் நேர்த்திக் கடனாக செலுத்தும் தங்கம், வெள்ளி மற்றும் பணம் பல லட்சம் ரூபாய் வருமானம் உள்ளது. ஆனால் போதிய துாய்மைப் பணியாளர்களை நியமிக்காமல் கோயில் அருகே குப்பை கொட்டி எரிக்கின்றனர்.

இதனால் ஏற்படும் புகையால் பக்தர்கள் சிரமப்படுகின்றனர். எனவே போதிய பணியாளர்களை நியமித்து வாகனம் மூலம் குப்பையை அள்ளி ஊருக்கு ஒதுக்குபுறமான இடத்தில் கொட்ட அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

Advertisement