பஸ் ஸ்டாண்ட் கழிப்பறையில் துர்நாற்றம்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆனந்துார் பஸ் ஸ்டாண்ட் கழிப்பறை பராமரிப்பின்றி துர்நாற்றம் வீசுவதால் பஸ் ஸ்டாண்ட் வரும் பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.

ஆர்.எஸ்.மங்கலம் அருகே ஆனந்துார் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு மையப்பகுதியாக உள்ளதால் அங்குள்ள பஸ் ஸ்டாண்ட்டிற்கு தினமும் 300க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர். முக்கியத்துவம் வாய்ந்த இங்கு பயணிகள் வசதிக்காக கட்டப்பட்டுள்ள கழிப்பறை கடந்த சில மாதங்களாக முறையாக பராமரிப்பில்லை. கழிப்பறை முழுவதும் கழிவுகள் தேங்கி துர்நாற்றம் வீசுகிறது. கழிப்பறையை முறையாக சுத்தம் செய்யப்படாததால் பயணிகள் பயன்படுத்த முடியாத நிலையில் பாதிப்படைந்துள்ளனர். எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் தினமும் கழிப்பறையை பராமரித்து சுகாதாரம் பேண வேண்டும் என பயணிகள் வலியுறுத்தினர்.

Advertisement