சிறுதானிய பயிரை காப்பாற்ற ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தும் விவசாயிகள்

ஆர்.எஸ்.மங்கலம்: ஆர்.எஸ்.மங்கலம் பகுதியில் சாகுபடி செய்யப்பட்டுள்ள சிறுதானிய பயிர்களை வறட்சியில் இருந்து காப்பாற்றுவதற்கு விவசாயிகள் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்துகின்றனர்.
ஆர்.எஸ்.மங்கலம் மற்றும் சுற்றுப்புற பகுதிகளான செங்குடி, சீனாங்குடி, வரவணி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம், இருதயபுரம், பெருமாள்மடை, புல்லமடை, வல்லமடை, சிலுகவயல், சவேரியார் பட்டினம் உட்பட சுற்றுப்புற பகுதிகளில் நெல் அறுவடைக்கு பின் கோடை சாகுபடியாக பருத்தி, எள், உளுந்து, மின்னி, தட்டை, நிலக்கடலை உள்ளிட்ட பல்வேறு கோடைகால பயிர்கள் சாகுபடி செய்துள்ளனர்.
சில வாரங்களாக தொடர்ந்து நிலவும் வறட்சியால் சாகுபடி செய்யப்பட்டுள்ள பெரும்பாலான கோடை சாகுபடி பயிர்கள் வெயிலுக்கு தாக்கு பிடிக்க முடியாமல் கருகத் துவங்கியுள்ளன. இதனால் பாதிப்படைந்துள்ள விவசாயிகள் பயிர்களை காப்பாற்ற கண்மாய்கள் மற்றும் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர்.
நன்செய் நிலங்களுக்கு மட்டுமே கண்மாய் தண்ணீர் பாய்ச்சப்படும் நிலையில் புன்செய் நிலங்களான மானாவரி நிலங்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கோடை பயிர்களுக்கு விவசாயிகள் ஆழ்துளை கிணற்று நீரை பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக செங்குடி, வரவணி, எட்டியத்திடல், முத்துப்பட்டினம் உள்ளிட்ட பகுதிகளில் விவசாயிகள் ஆழ்துளை கிணற்று நீரால் கோடை சாகுபடி பயிர்களை காப்பாற்றுகின்றனர்.
மேலும்
-
இந்திய அணியில் இடம் * சாய் சுதர்சன் இலக்கு
-
கனடா கேப்டன் கைது * கஞ்சா வழக்கில்...
-
இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
-
கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை