கால்நடை ஆம்புலன்சுக்கு டாக்டர் இன்றி பழுதாகும் நிலை
திருவாடானை: கால்நடை ஆம்புலன்சுக்கு டாக்டர் இல்லாததால் மூன்று மாதங்களாக வாகனம் இயங்காத நிலையில் பழுதாகும் அவலநிலை ஏற்பட்டுள்ளது.
கால்நடை வளர்ப்போர் வசதியை கருத்தில் கொண்டு கால்நடைகள் இருக்கும் இடத்திலேயே அவசர சிகிச்சையளிக்கும் வகையில் அரசு சார்பில் நடமாடும் கால்நடை ஆம்புலன்ஸ் இலவச சேவை துவங்கப்பட்டது. இந்த ஆம்புலன்சில் தேவையான அனைத்து அத்தியாவசிய கருவிகள், உபகரணம்கள், மருந்துகள் இருக்கும்.
ஒரு கால்நடை டாக்டர், உதவியாளர், ஓட்டுநர் ஆகியோர் இருப்பர். நடக்க இயலாத கால்நடைகளை வாகனத்தில் ஏற்ற ஹைட்ராலிக் லிப்ட் பொருத்தப்பட்டுள்ளது. கால்நடை வளர்ப்போர் 1962 என்ற இலவச தொலைபேசி எண்ணில் அழைத்தால் சென்னையில் உள்ள கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்படும்.
அதனை தொடர்ந்து அவசர உதவி தேவைப்படும் இடத்துக்கு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்கப்படும். இத்திட்டம் பயனுள்ளதாக அமைந்துள்ளதால் நோயால் பாதிக்கப்பட்ட ஆடு, மாடுகளுக்கு பயனுள்ளதாக இருந்தது.இந்நிலையில் திருவாடானையில் இயங்கிவந்த ஆம்புலன்சில் மூன்று மாதத்திற்கும் மேலாக கால்நடை டாக்டர் மற்றும் உதவியாளர் பணியிடம் காலியாக இருப்பதால் வாகனம் திருவாடானை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ஓரமாக நிறுத்தப்பட்டுள்ளது. பல மாதங்களாக வாகனம் இயக்கப்படாமல் இருப்பதால் பழுதாகும் நிலை ஏற்பட்டுள்ளது.
மேலும்
-
இந்திய அணியில் இடம் * சாய் சுதர்சன் இலக்கு
-
கனடா கேப்டன் கைது * கஞ்சா வழக்கில்...
-
இலங்கை சென்றார் பிரதமர் மோடி: வரவேற்ற அமைச்சர்கள்
-
வக்ப் சட்டத்திருத்த விவாதத்தில் ராகுல், பிரியங்கா மவுனம்; கேரள முஸ்லிம் அமைப்பு கண்டனம்
-
அமெரிக்காவில் இருந்து 682 இந்தியர்கள் நாடு கடத்தல்: மத்திய அரசு தகவல்
-
கனடாவில் கிருஷ்ணர் கோவிலை சேதப்படுத்திய இருவருக்கு போலீசார் வலை