தலைமை செவிலியர் நியமிக்க வேண்டும்

ராமநாதபுரம்: ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தலைமை செவிலியர் பணியிடம் காலியாக உள்ளதால் இதனை நிரப்ப அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் 333 செவிலியர்களும், ஒப்பந்த அடிப்படையில் 37 செவிலியர்களும் பணிபுரிகின்றனர். இவர்கள் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் உள்ள மகப்பேறு பிரிவு, குழந்தைகள் நலப்பிரிவு, அவசர சிகிச்சை பிரிவு, தீவிர சிகிச்சைப்பிரிவு உட்பட பல்வேறு வார்டுகளிலும் பணிபுரிகின்றனர்.

செவிலியர்களை கண்காணிக்கும் பொறுப்பில் தலைமை செவிலியர் நியமிக்கப்பட்டிருக்க வேண்டும். இந்த பணியிடம் 2 ஆண்டுகளுக்கும் மேலாக காலியாகவுள்ளது. தற்போது பொறுப்பு அடிப்படையில் தலைமை செவிலியர் நியமிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் செய்யப்பட்டு வருகின்றன. தலைமை செவிலியரை நிரந்தரமாக நியமிக்காமல் இருப்பதால் கண்காணிப்பு பணிகளில் தொய்வு ஏற்பட்டுள்ளது.

எனவே தலைமை செவிலியரை நியமிக்க தமிழக அரசும், சுகாதாரத்துறையும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லுாரி நிர்வாகம் அரசுக்கு பரிந்துரை செய்ய வேண்டும்.

Advertisement