ஸ்குவாஷ்: காலிறுதியில் அபே சிங்

மான்செஸ்டர்: இங்கிலாந்தில் சர்வதேச மான்செஸ்டர் ஓபன் ஸ்குவாஷ் தொடர் நடக்கிறது. ஆண்கள் ஒற்றையர் இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அபே சிங், பிரிட்டனின் லேக் நாதனை சந்தித்தார்.
முதல் செட்டை 11-4 என கைப்பற்றிய அபே சிங், அடுத்த செட்டை 2-11 என மோசமாக இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த இரு செட்டுகளை 11-7, 11-8 என்ற கணக்கில் வசப்படுத்தினார். முடிவில் அபே சிங், 3-1 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்கு முன்னேறினார்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
Advertisement
Advertisement