கணவன், மனைவி தற்கொலை அகதிகள் முகாமில் பரிதாபம்

1

திருநெல்வேலி: திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் அருகே சமூகரெங்கபுரம் இலங்கை அகதிகள் முகாமில் வசிப்பவர் தியாகராஜன் மகள் கீதா, 23. இவருக்கும் திருச்சி, கொட்டாம்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் வசிக்கும் உறவினர் நந்தகுமார், 29, என்பவருக்கும், நான்கு ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.

நந்தகுமாருக்கு குடிப்பழக்கம் இருந்தது. குழந்தை இல்லாததால் கீதா, சமூகரெங்கபுரத்தில் உள்ள பெற்றோர் வீட்டுக்கு வந்து விட்டார். மூன்று ஆண்டுகளாக நந்தகுமார் சமூகரெங்கபுரம் வந்து செல்வார்.

அவரது குடிப்பழக்கத்தால் நேற்று முன்தினம் இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. மனமுடைந்த கீதா வீட்டில் இருந்த ஹேர் ஆயில் தைலத்தை குடித்து, தற்கொலை செய்து கொண்டார்.

மனைவி இறந்ததால் விரக்தியடைந்த நந்தகுமாரும் வீட்டு அருகே தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இவர்களுக்கு திருமணமாகி நான்கு ஆண்டுகளே ஆவதால், கோட்டாட்சியர் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

Advertisement