லஞ்சம்: பில் கலெக்டர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் மாலைகண்டான் கிராமம் கணேசன். இவர் செந்தமிழ் நகரில் மனைவி பெயரில் வீடு வாங்கினார். வீட்டு வரியில் மனைவியின் பெயரை மாற்ற, நகராட்சி அலுவலகத்தில் விண்ணப்பித்தார். பில் கலெக்டர் பாலமுருகன் 36, ரூ.20 ஆயிரம் லஞ்சமாக கேட்டார். கணேசன், லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார்.

வீட்டில் வைத்து பணம் தருவதாக நேற்று மாலை பாலமுருகனை, கணேசன் அழைத்தார். ரசாயன பவுடர் தடவிய ரூ.9000 ஐ அவரிடம் கொடுத்த போது, லஞ்ச ஒழிப்பு போலீசார் பாலமுருகனை கைது செய்தனர்.

தொடர்ந்து சிவகங்கை நகராட்சி அலுவலகத்தில் வைத்து விசாரித்தனர்.

Advertisement