ஹாக்கி லீக்... ரசிகர்கள் ஆதரவு

புதுடில்லி: இந்தியாவில் நடந்த ஹாக்கி இந்தியா லீக் தொடரை, 4 கோடி பேர் ரசித்துள்ளனர்.
ஹாக்கி இந்தியா அமைப்பு (எச்.ஐ.,) சார்பில் ஐ.பி.எல்., பாணியில் ஹாக்கி இந்தியா லீக் (எச்.ஐ.எல்.,) தொடர் கடந்த 2013ல் துவக்கப்பட்டது. ஏழு ஆண்டு இடைவெளிக்குப் பின், இத்தொடரின் ஆறாவது சீசன், சமீபத்தில் நடந்தது.
8 அணிகள் பங்கேற்ற இத்தொடரில் பெங்கால் டைகர்ஸ் கோப்பை வென்றது. முதன் முறையாக நடந்த பெண்களுக்கான தொடரில் ஒடிசா சாம்பியன் ஆனது. இதை டிவி, இணையதளத்தில் பார்த்தவர்கள் விபரம் வெளியானது. கடைசியாக 2017ல் 2.75 கோடி பேர் பார்த்திருந்தனர். இம்முறை 48 சதவீதம் அதிகரித்து, ஒட்டுமொத்தமாக 4.08 கோடி பேர் கண்டு ரசித்துள்ளனர்.
ஆண்களுக்கான பைனலை 30.7 லட்சம் பேர், பெண்கள் பைனலை 29.2 லட்சம் பேர் பார்த்தனர். ஹாக்கி விளையாடும் 18 நாடுகளில், இத்தொடரை 50 லட்சம் பேர் பார்த்துள்ளனர்.
பொதுவாக ஆண்கள், பெண்கள் போட்டிகளுக்கான பார்வையாளர்கள் வித்தியாசம் 6 மடங்கு இருக்கும். ஹாக்கி லீக்கில் ஏறக்குறைய சமமாக இருந்தது. ஆண்களுக்கான 44 போட்டிகளை 3.3 கோடி பேர் பார்த்த நிலையில் பெண்களுக்கான 13 போட்டியை மட்டும் 1.51 கோடி ரசிகர்கள் ரசித்துள்ளனர்.
தவிர இன்ஸ்டாகிராம், பேஸ்புக், டுவிட்டர் வழியாக 3000க்கும் மேற்பட்ட பதிவுகளை, 100 கோடிக்கும் அதிகமானவர்கள் பார்த்துள்ளனர்.

Advertisement