தீயில் சிக்கிய இந்திய சிறுவர்கள்; உயிர் காத்த தொழிலாளர்களுக்கு சிங்கப்பூர் அரசு கவுரவம்

சிங்கப்பூர்: சிங்கப்பூரில் பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் இருந்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உட்பட குழந்தைகளை மீட்ட இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது.
சிங்கப்பூரில் ஏப்ரல் 8ம் தேதி பள்ளி ஒன்றில் தீ விபத்து ஏற்பட்டது. குழந்தைகளின் அலறல் சத்தங்களைக் கேட்டதும் இந்திய புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் 4 பேர் சிறிதும் தாமதிக்காமல், மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
நீண்ட நேரம் போராடி குழந்தைகள் அனைவரையும் மீட்டனர். அப்போது நடிகரும், ஆந்திர மாநில துணை முதல்வராகவும் இருக்கும் பவன் கல்யாணின் இளைய மகன் மார்க் சங்கரும் தீ விபத்தில் சிக்கி கொண்டார்.
பள்ளியில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி மார்க் சங்கர் காயம் அடைந்தார். அவருக்கு கைகள், கால்களில் காயம் ஏற்பட்டது. தற்போது குழந்தைகள் அனைவரும் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.
தீ விபத்தில் இருந்து ஆந்திரா துணை முதல்வர் பவன் கல்யாண் மகன் உட்பட குழந்தைகளை மீட்ட இந்திய தொழிலாளர்கள் 4 பேரை அந்நாட்டு அரசு கவுரவித்துள்ளது. அவர்கள் துணிச்சல் பாராட்டுக்குரியது என சிங்கப்பூர் அரசு தெரிவித்துள்ளது.










மேலும்
-
தமிழகத்தில் தி.மு.க., அரசு தத்தளிக்கிறதுகோபியில் செங்கோட்டையன் பேச்சு
-
சவுக்கு சங்கர் மீதான அவதுாறு வழக்கு 50 பேரிடம் கோவை போலீசார் விசாரணை
-
வாரச்சந்தை மேம்பாடுகுறித்த கருத்து கேட்பு
-
இரு ஜாக்கிகள் திருட்டுகோபியில் வாலிபர் கைது
-
ஓய்வு பெற்ற நீதிமன்றபணியாளர் வீட்டில் திருட்டு
-
மள்ளர் மீட்பு கழக தலைவருக்கு பாலியல் வழக்கில் 'குண்டாஸ்'