அ.தி.மு.க., தேர்தல் பிரசாரம்; ஆளும்கட்சியினர் அதிர்ச்சி

பொள்ளாச்சி: தமிழக சட்டசபை தேர்தலுக்கு, அரசியல் கட்சிகள் கூட்டணி அமைப்பது குறித்த பரபரப்பில் இருக்கும் நிலையில், பொள்ளாச்சி தொகுதியில், அ.தி.மு.க., திண்ணை பிரசாரத்தை துவக்கியுள்ளது.

தமிழக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் ஓராண்டு உள்ளது. தற்போது, அ.தி.மு.க., - பா.ஜ., கூட்டணி உறுதியாகி இருக்கும் நிலையில், மற்ற கட்சிகளுடன் பேச்சு நடத்தி வருகிறது. இந்நிலையில், கோவை புறநகர் தெற்கு மாவட்ட ஜெ., பேரவை சார்பில், பொள்ளாச்சி அருகே நல்லுாரில் நேற்று திண்ணை பிரசாரம் துவங்கப்பட்டது.

இதில் கலந்து கொண்ட எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், 10 ஆண்டு கால ஆட்சியில் செய்த திட்டங்கள், தி.மு.க., அரசு பதவியேற்ற நான்கு ஆண்டுகளில், பொதுமக்கள், விவசாயிகள், வியாபாரிகள் மற்றும் அனைத்து தரப்பினருக்கு ஏற்பட்டுள்ள இன்னல்களை எடுத்துக்கூறி, துண்டு பிரசுரங்களை வழங்கினார்.

தேர்தலுக்கு எந்தக் கட்சி சார்பிலும் வேட்பாளர்கள் அறிவிக்காத நிலையில், பொள்ளாச்சி தொகுதியில் அ.தி.மு.க., பிரசாரத்தை துவங்கியுள்ளது, ஆளும்கட்சியை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.


புல அவுட்:

அ.தி.மு.க., ஆட்சிக்கு வர10 அமாவாசையே உள்ளதுதிராவிட மாடல் ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அரிசி, மளிகை பொருட்கள் விலை உயர்ந்ததால் ஏழை, எளிய மக்கள் கஷ்டப்படுகின்றனர். அ.தி.மு.க., ஆட்சிக்கு வர, இன்னும், 10 அமாவாசை தான் உள்ளது. ஏற்கனவே அ.தி.மு.க., ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, தி.மு.க., ஆட்சியில் நிறுத்தப்பட்ட அனைத்து திட்டங்களும் மீண்டும் செயல்படுத்தப்படும்.பொள்ளாச்சி ஜெயராமன், முன்னாள் துனை சபாநாயகர்

Advertisement