தரமான வெளிப்பூச்சு வேலைக்கு 1:5 கலவை; வலிமையை உறுதிசெய்யும் 'மெஷரிங் பாக்ஸ்'

ஒரு மிகச்சரியான உள் பூச்சு, வெளிப் பூச்சுக்கு பொருட்களின் தரம் மற்றும் வேலை சார்ந்த ஆட்களின் திறனும், மிக முக்கியமானதாக கருதப்படுகிறது. 'சீலிங்' பூச்சு ஆரம்பிக்கும் முன்பு கான்கிரீட் பரப்புகளில் புள்ளி வைத்தல் மிகவும் அவசியம்.
அந்த புள்ளியானது ஒரு சதுர அடிக்கு, 25 முதல் 30 புள்ளிகளும், அதன் நீளம், 50 மி.மீ., ஆகவும், ஆழம், 3 மி.மீ., அளவிலும் இருத்தல் வேண்டும். அது, 'ஜிக்ஜாக்' முறையாக இருக்க வேண்டும். அப்போது தான் கான்கிரீட் உடன் பூச்சுக்கலவை நன்றாக ஒட்டும்.
'காட்சியா' செயல்பாட்டு குழு உறுப்பினர் ஸ்ரீராம் நம்மிடம் பகிர்ந்துகொண்டதாவது:
சீலிங் பூச்சின் கலவையானது, 1:3 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அடுத்ததாக சுவர் பூச்சு பூசும் முன், நீளம், அகலம், கோணம்(மூலைமட்டம்) சரியாக அமைவதற்காக, அனைத்து சுவர்களிலும் அளவுகோலுக்காக, கலவையில் அடையாள அளவு செய்ய வேண்டும்.
உள்புற பூச்சுக்கு குறைந்த அளவாக, 12 மி.மீ., கனம் இருக்க வேண்டும். உள்புறம் மற்றும் வெளிப்புற பூச்சின் கலவையானது, 1:5 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். வெளிப்புறப் பூச்சிற்கு, 20 மி.மீ., கனம் இருக்க வேண்டும்.
பூச்சு ஆரம்பிக்கும் முன் மின்சார வேலைக்காக மறைவான குழாய் பதிக்க, சுவரை குடைதல் செய்து குழாய் பதிக்க வேண்டும்.
குழாய் பதித்த பின்பு, அதன் மேல் இரும்பு வலை பொருத்த வேண்டும். அந்த வலையானது பக்கத்துக்கு இரண்டு முதல் மூன்று இன்ச் இருக்க வேண்டும். கான்கிரீட் மற்றும் சுவர் இணையும் இடங்களிலும், இவ்வலையை பொருத்த வேண்டும்.
வலை பொருத்து வதினால் சுவர்களில் வரும் வெடிப்புகளை தடுக்கலாம். வலை பொருத்தும் பணிகள் முடிவடைந்த பின், 1:3 விகிதத்தில் கலவை தயார் செய்து அதன் மேல் பூச வேண்டும். இவ்வேலை முடிந்ததில் இருந்து, மூன்று நாட்கள் சுவரை ஈரப்படுத்தல் வேண்டும்.
இதனால் சுவரானது, கலவையின் ஈரப்பதத்தை உரியாமல் இருக்கும். பின்பு 'மெஷரிங் பாக்ஸ்' உதவியுடன், கலவை தயார் செய்து பூச்சு வேலையை தொடங்கலாம்.
உள்புறம் மற்றும் வெளிப்புற பூச்சு முடிந்தவுடன், குறைந்தது ஒரு வாரத்திற்கு நீராற்றுதல் வேண்டும்.
வெளிப்பூச்சு செய்யும் பொழுது, நீர் காப்பு ரசாயனங்களை பயன்படுத்தினால் நீர்க்கசிவையும் அதிக அளவு வெப்பத்தையும் தடுக்கலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.
மேலும்
-
அரை மனதோடு அமைக்கப்பட்ட கூட்டணி: திருமாவளவன் பேட்டி
-
யு.பி.ஐ., சேவை பாதிப்பு: கூகுள்பே, போன்பேயில் பணபரிமாற்ற சிக்கல்: பயனர்கள் அவதி
-
இனி சிக்ஸர் அடிக்குறது தான் வேலை; சொல்கிறார் அண்ணாமலை
-
போறேன் நான் போறேன் வெறும் கூடா போறேன்
-
காதலியை சூட்கேசில் மறைத்த மாணவன்; விடுதிக்குள் கொண்டு சென்றபோது சிக்கிய சம்பவம்
-
கேரளாவில் ரயில் மோதி 17 பசு மாடுகள் பலியான பரிதாபம்!