கேரளாவில் ரயில் மோதி 17 பசு மாடுகள் பலியான பரிதாபம்!

திருவனந்தபுரம்: கேரளாவில் ரயில் மோதி 17 பசு மாடுகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
கேரளா மாநிலம் பாலக்காட்டில் சென்னை-பாலக்காடு ரயில் சென்று கொண்டிருந்தது. அப்போது ரயிலின் தண்டவாளத்தை கடக்க பசு மாடுகள் கூட்டம் முயற்சி செய்துள்ளது. இதில் வேகமாக வந்த ரயில் மோதி 17 பசுக்கள் பரிதாபமாக உயிரிழந்தன.
இறந்தவற்றில் ஒன்று கன்றுக்குட்டி. ரயிலில் அடிபட்ட சில மாடுகள் தண்டவாளத்தில் உடல் நசுங்கிக் கிடந்தன. அருகிலுள்ள பள்ளத்தில் சில பசுக்களின் உடல்களும் கண்டெடுக்கப்பட்டன. சம்பவ இடத்திற்கு விரைந்த மீட்பு படையினர் பசுக்களின் உடல்களை அகற்றி ரயில் போக்குவரத்தை சீர் செய்தனர்.
இறந்த மாடுகளை அடக்கம் செய்வது குறித்து பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்ததாக போலீசார் தெரிவித்தனர். தன் மாடுகள் உயிரிழந்ததை கண்டு, அவற்றின் உரிமையாளர்களில் ஒருவர் மயக்கம் அடைந்தார். அந்த சம்பவம் கிராம மக்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.







மேலும்
-
நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி
-
பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?
-
தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு சிறப்பு
-
கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை 25ம் ஆண்டு சிறப்பு
-
சிட்டி கிரைம் செய்திகள்
-
இயற்கையை பாதுகாப்பது நம் கடமை மாவட்ட நீதிபதி விஜயா பேச்சு