ரயில் பயணியிடம் செயின் பறிப்பு

அரக்கோணம் சென்னை, கொரட்டூரைச் சேர்ந்தவர் முத்துக்குமாரசுவாமி, 65. இவரது மனைவி பால சரஸ்வதி, 60. இருவரும், திருப்பதி சென்றிருந்தனர்.

அங்கிருந்து, சென்னை சென்ட்ரல் வருவதற்காக, 'சத்ரபதி எக்ஸ்பிரஸ்' ரயிலில் பயணம் செய்தனர். ரயில், நேற்று காலை அரக்கோணம் ரயில் நிலையம், 5வது நடைமேடையில் நின்றது.

பயணியர் இறங்கியவுடன் புறப்பட தயாரானது. அப்போது திடீரென ஒரு வாலிபர், ரயில் ஜன்னல் வழியாக கையை விட்டு, பால சரஸ்வதியின் 6 சவரன் செயினை பறித்து தப்பி ஓடினார். இது குறித்து, அரக்கோணம் ரயில்வே போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Advertisement