தமிழகத்தில் வெப்பம் அதிகரிக்கும்: அசவுகரியம் ஏற்படலாம் - வானிலை மையம் எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தில் இன்று( ஏப்.,12) முதல் 14ம் தேதி வரை அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில், தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம் என சென்னை வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை வானிலை மையத்தின் இயக்குநர் செந்தாமரை கண்ணன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழை பெய்துள்ளது. புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் லேசான மழை பதிவாகி உள்ளது.
அதிகபட்சமாக கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் 9, திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி, தஞ்சாவூர் மாவட்டம் மதுக்கரையில் 8 செ.மீ., மழை பதிவாகி உள்ளது.
மழை எச்சரிக்கை
மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி, கோயம்புத்தூர் மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் மலைப்பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும்
நாளை( ஏப்.,13) இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும்
ஏப்.,14 முதல் 18 வரை லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.
வெப்பநிலையை பொறுத்தவரை
இன்று முதல் 14ம் தேதி வரை தமிழகத்தில் அதிகபட்ச வெப்பநிலை ஒரு சில இடங்களில் 2- 3 டிகிரி செல்சியஸ் இயல்பை விட அதிகமாக இருக்கக்கூடும்.
இதே காலத்தில், அதிக வெப்பநிலையும், அதிக ஈரப்பதமும் இருக்கும் நிலையில் தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் அசவுகரியம் ஏற்படலாம்.
சென்னையில்
சென்னை மற்றும் புறநகரில், இன்று வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. அதிகபட்சமாக 37 - 38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 27 - 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 37 - 38 டிகிரி செல்சியசை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 2 7- 28 டிகிரி செல்சியசை ஒட்டியும் இருக்கக்கூடும்.
தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டிய குமரிக்கடல் பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்படுகிறார்கள். இவ்வாறு அந்த அறிக்கையில் செந்தாமரை கண்ணன் கூறியுள்ளார்
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஏப்.24ல் நிலஅளவை அலுவலர்கள் ஆர்ப்பாட்டம்
-
பகுதிநேர ஆசிரியர்களை பணி நிரந்தரம் செய்வது எப்போது தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றுவாரா முதல்வர்
-
நெருங்கிய உறவினர் இறுதி சடங்கில் விசாரணை கைதிகள் பங்கேற்க அனுமதி
-
பாட்டி சொத்தை விற்க உடன் பிறந்தோர் சம்மத பத்திரம் தேவையா?
-
தண்டுமாரியம்மன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு சிறப்பு
-
கொங்கு வேளாளக் கவுண்டர் பேரவை 25ம் ஆண்டு சிறப்பு
Advertisement
Advertisement