ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா


ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா


ஊத்தங்கரை:ஊத்தங்கரை அடுத்த, படப்பள்ளி கிராமத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேக விழா நேற்று நடந்தது.
நேற்று முன்தினம் கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமம் நடந்தது. முதல் கால யாகசாலை பூஜை, விக்னேஸ்வர பூஜை உள்ளிட்டவை நடத்தப்பட்டன. நேற்று விநாயகர் பூஜை, சூரிய பூஜை, கோ பூஜை, இரண்டாம் கால பூஜை செய்து, ஆஞ்சநேயர் கோவில் கும்பாபிஷேகம் நடந்தது. கோபுர கலசத்திற்க்கு சிவாச்சாரியார்கள் புனிதநீர் தெளித்தனர். திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

Advertisement