மக்களுக்கு சேவை செய்வதில் ஐ.ஏ.எஸ். பதவியை விட அரசியலில் மகிழ்ச்சி: சத்தீஸ்கர் அமைச்சர் நெகிழ்ச்சி

ராய்ப்பூர்: மக்களுக்கு சேவை செய்ய, ஐ.ஏ.எஸ். பதவியை விட அரசியலில் நேரடி வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி என்று சத்தீஸ்கர் நிதி அமைச்சர் ஓ.பி. சவுத்ரி கூறினார்.
சத்தீஸ்கர் அமைச்சரவையில், முன்னாள் ஐ.ஏ.எஸ் ஆக இருந்த ஓ.பி. சவுத்ரி, நிதி அமைச்சராக உள்ளார். இந்நிலையில் அவர் ஐ.ஏ.எஸ் முதல் அரசியல் வரை தனது பயணம் குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டி:
"என் அம்மா நான்காம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்தாலும், என்னை எப்போதும் உயர்ந்த இலக்குகளை நோக்கி முன்னேற ஊக்கப்படுத்தினார்,"
பள்ளியில் நண்பர்கள் ஸ்கூட்டரில் வரும் போது, நான் நடந்தே போவேன். 'கல்வி மட்டுமே உன் வாழ்க்கையை மாற்றும்' என்று" என் அம்மா சொல்லியிருக்கிறார்.
ஏழை குடும்பத்தில் பிறந்த நான், பொருளாதார சிரமங்களையும் சமாளித்து 2005ல் ஐ.ஏ.எஸ்., தேர்வில் 14வது ரேங்க் பெற்றேன், பின்னர் அரசியலில் முன்னணி பங்காற்றவும், கடின உழைப்பு, குடும்பத்தின் பங்களிப்பு மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.
2023ல் பா.ஜ.,சார்பில் அரசியலுக்கு வந்தேன். தற்போது மாநில அமைச்சரவையில் நிதி அமைச்சராக இருக்கின்றேன். இந்நிலையில் ஐ.ஏ.எஸ். பதவியை விட அரசியல் மூலம் மக்களுக்கு நேரடியாக சேவை செய்ய வாய்ப்பு கிடைத்ததில் மகிழ்ச்சி அடைகிறேன்.
படிப்பு மற்றும் ஒழுக்கம் எந்த பின்னணியிலும் வெற்றிக்கு வழி வகுக்கும்.எளிய குடும்பங்களில் இருந்து வரும் குழந்தைகளின் கனவுகளுக்கு ஆதரவாக இருங்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.