மானுவுக்கு நான்கு ஆண்டு தடை

புதுடில்லி: இந்திய ஈட்டி எறிதல் வீரர் டி.பி.மானு 25. கடந்த 2023 ஆசிய சாம்பியன்ஷிப்பில் வெள்ளி வென்றார். புடாபெஸ்டில் நடந்த உலக சாம்பியன்ஷிப்பில் 6வது இடம் பெற்றார். 2024, ஏப்ரல் மாதம் நடந்த பெங்களூருவில் நடந்த இந்தியன் ஓபன் தடகளத்தில் 81.91 மீ., துாரம் ஈட்டி எறிந்து, தங்கம் வென்றார்.
அப்போது இவரிடம் ஊக்கமருந்து சோதனை நடத்தப்பட்டது. இதில் தடை செய்யப்பட்ட அனபோலிக் ஆன்ட்ரோஜெனிக் ஸ்டிராய்டு என்ற மருந்து பயன்படுத்தியது உறுதியானது. இதையடுத்து மானுவுக்கு நான்கு ஆண்டு தடை விதிக்கப்பட்டது. இவரது தடை 2024, ஜூன் 24ல் இருந்து துவங்கியது.
தவிர பெண்கள் ரிலே ஒட்டத்தில் பங்கேற்ற சிமர்ஜீத் (4 ஆண்டு), 'கிக் பாக்சர்' ரவிந்தர் சிங் (4), குத்துச்சண்டை வீராங்கனை ரேஹா, மல்யுத்தத்தின் நரேந்தர் சீமா (2), ஜூனியர் 'ஹாம்மர் த்ரோ' நிதேஷ் பூனியா (2) என ஊக்கமருந்து விதிகளை மீறிய ஐந்து பேருக்கும் தடை விதிக்கப்பட்டது.

Advertisement