பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு


பட்டா நிலத்தில் மண்வெட்டியவர் மீது வழக்கு


மோகனுார்:மோகனுார் அடுத்த ஆண்டாபுரத்தில், கனிம வளத்துறை உதவி புவியியலாளர் நாகராஜன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அனுமதியின்றி பட்டா நிலத்தில் இருந்து மண்ணை வெட்டி எடுத்து செல்வது கண்டறியப்பட்டது. விசாரணையில், ஆண்டாபுரத்தை சேர்ந்த விவசாயி சுப்ரமணி, 55, என்பது தெரியவந்தது. கனிம வளத்துறையினர் வருவதை அறிந்த பொக்லைன் டிரைவர் வண்டியை அங்கேயே விட்டுவிட்டு, தப்பி ஓடி தலைமறைவானார். நேற்று மாலை, 6:00 மணிக்கு, பொக்லைன் வண்டியை பறிமுதல் செய்து, மோகனுார் போலீசில் ஒப்படைக்கப்பட்டது. எஸ்.ஐ., இளையசூரியன் வழக்குப்பதிந்து விசாரித்து வருகிறார்.

Advertisement