பா.ஜ., தலைவர் வீட்டில் கையெறி குண்டு வீசிய முக்கிய குற்றவாளி டில்லியில் கைது

சண்டிகர்:பா.ஜ., தலைவர் மனோரஞ்சன் காலியாவின் ஜலந்தர் வீட்டில் நடந்த கையெறி குண்டு வெடிப்பு தொடர்பான வழக்கில் முக்கிய குற்றவாளி டில்லியில் கைது செய்யப்பட்டான்.

கடந்த ஏப்ரல் 7 ஆம் தேதி, பஞ்சாப் மாநிலம் ஜலந்தரில் உள்ள காலியாவின் வீட்டின் மீது சிலர் கையெறி குண்டு வீசி, கண்ணாடி கண்ணாடிகளை உடைத்து, வாகனங்களை சேதப்படுத்தினர்.

குண்டுவெடிப்பில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பாக இரண்டு பேரை போலீசார் கைது செய்திருந்தனர். பஞ்சாபில் வகுப்புவாத பதட்டத்தை ஏற்படுத்த பாகிஸ்தானின் உளவு அமைப்பான இன்டர்-சர்வீசஸ் இன்டலிஜென்ஸ் (ஐஎஸ்ஐ) மற்றும் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பலைச் சேர்ந்தவர்கள் சதி செய்ததாக தெரிவித்தனர்.

குற்றத்தில் பயன்படுத்தப்பட்ட இ-ரிக்ஷாவும் மீட்கப்பட்டது. இதனை தொடர்ந்து இன்று இந்த சம்பவம் தொடர்பாக, முக்கிய குற்றவாளி ஒருவன் டில்லியில் கைது ஆனதாக பஞ்சாப் போலீஸ் அதிகாரி கவுரவ் யாதவ் கூறினார்.

போலீஸ் அதிகாரி கவுரவ் யாதவ் கூறியதாவது:



"ஜலந்தர் கையெறி குண்டு தாக்குதல் வழக்கில் ஒரு பெரிய திருப்புமுனையாக, ஜலந்தர் கமிஷனரேட் காவல்துறை, மத்திய அமைப்புகள் மற்றும் டில்லி காவல்துறையின் ஆதரவுடன், உத்தரப்பிரதேசத்தின் அம்ரோஹாவைச் சேர்ந்த சைதுல் அமீன் பிடிபட்டான்.


இந்த சம்பவத்தில் சைதுல் அமீன் தான் முக்கிய குற்றவாளி. இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள், நிதி ஆதரவாளர்கள் மற்றும் சாத்தியமான வெளிநாட்டு தொடர்புகளை கண்டறிய மேலும் விசாரணைகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

இவ்வாறு கவுரவ் யாதவ் கூறினார்.

Advertisement