பல்கலை துணைவேந்தர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
சென்னை:சேலம் பல்கலை துணை வேந்தர் உள்ளிட்டோர் மீதான வழக்கை ரத்து செய்ய, சென்னை உயர் நீதிமன்றம் மறுத்து விட்டது.
சேலம் பெரியார் பல்கலை துணை வேந்தர் ஆர்.ஜெகநாதன். இவர், அரசு அனுமதியின்றி, விதிகளை மீறி சொந்தமாக பெரியார் பல்கலை தொழில்நுட்ப தொழில் முனைவோர் மற்றும் ஆராய்ச்சி அமைப்பை துவங்கி, அரசு நிதியை பயன்படுத்தியதாக, ஊழியர்கள் சங்கத்தினர் புகார் அளித்தனர். இதுபற்றி, பல்கலை ஊழியர் சங்கத்தினர் கேள்வி எழுப்பிய போது, ஜாதி பெயரை குறிப்பிட்டு பேசியதாக, துணை வேந்தருக்கு எதிராக புகார் எழுந்தது.
புகார் அடிப்படையில், சேலம் கருப்பூர் போலீசில் ஜெகநாதன் உள்ளிட்டோர் மீது, மோசடி, வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் உள்ளிட்டோர் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுக்களை, நீதிபதி ஜி.கே.இளந்திரையன் விசாரித்தார்.
வழக்கை ரத்து செய்ய, காவல் துறை தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் தரப்பில், 'எந்த முறைகேடும் நடக்கவில்லை' என்று வாதிடப்பட்டது. இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, துணை வேந்தர் ஜெகநாதன், பதிவாளர் தங்கவேல் ஆகியோர் மீதான வழக்கை ரத்து செய்ய மறுத்து, மனுக்களை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும்
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
-
சிறைச்சாலை முன் கார்களுக்கு தீ வைப்பு: பிரான்சில் மர்ம நபர்கள் தாக்குதல்
-
முதல்வரின் பதிலை கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா: இ.பி.எஸ்., விமர்சனம்