மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்

மக்காவ்: உலக கோப்பை டேபிள் டென்னிஸ் லீக் போட்டியில் இந்தியாவின் ஸ்ரீஜா தோல்வியடைந்தார்.
சீனாவில், உலக கோப்பை டேபிள் டென்னிஸ் (ஒற்றையர்) தொடர் நடக்கிறது. இந்தியா சார்பில் மணிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா மட்டும் பங்கேற்கின்றனர்.
'குரூப்--9' முதல் போட்டியில் ஆஸ்திரேலியாவின் கான்ஸ்டான்டினா சைஹோகியோசை வீழ்த்திய ஸ்ரீஜா அகுலா, இரண்டாவது போட்டியில் ருமேனியாவின் பெர்னாடெட் சோக்சை எதிர்கொண்டார். இதில் வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் களமிறங்கிய ஸ்ரீஜா 0-4 (8-11, 6-11, 9-11, 8-11) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
'குரூப்-16' முதல் போட்டியில் பிரான்சின் கிரெட் மேலிசை வீழ்த்திய மணிகா பத்ரா, 2வது போட்டியில் பிரேசிலின் புருனா டகாஹஷி மோதினர். இதில் ஏமாற்றிய மணிகா 1-3 (11-13, 8-11, 4-11, 12-10) என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.
இதனையடுத்து மணிகா, ஸ்ரீஜா, 'நாக்-அவுட்' சுற்றுக்கான வாய்ப்பை இழந்து வெளியேறினர்.
மேலும்
-
கால தாமதமான அறிவிப்பு; பின் தேதியிட்ட வயது வரம்பு; போலீஸ் எஸ்.ஐ., தேர்வுக்கு தயாரான பலர் தவிப்பு
-
சீன கப்பல்களுக்கு துறைமுக கட்டணம்: டிரம்ப் அடுத்த அதிரடி திட்டம்!
-
வெண்ணை உருண்டை பாறை பாதுகாக்கப்பட்ட சின்னமானது
-
டில்லியில் அதிகாலை இடிந்து விழுந்த கட்டடம்: ஏராளமானோர் சிக்கி தவிப்பு
-
காரைக்கால் துறைமுகத்தில் படகு எரிந்து ரூ.10 லட்சம் சேதம்
-
மயங்கி விழுந்த ஜவுளி கடை ஊழியர் பலி