ரயில்வேயில் இன்ஜின் உதவி டிரைவர்கள் 1,280 பேர் பெண்கள்தமிழகத்தில் பணியில் உள்ளோர் 43 பேர்
ரயில்வேயில் இன்ஜின் உதவி டிரைவர்கள் 1,280 பேர் பெண்கள்தமிழகத்தில் பணியில் உள்ளோர் 43 பேர்
கரூர்:நாடு முழுவதும், ரயில் இன்ஜின்களில் பணியாற்றும் உதவி பெண் டிரைவர்களின் எண்ணிக்கை ஆண்டுதோறும் அதிகரித்து வருகிறது. தமிழகத்தில் மட்டும், 43 பேர் பணியாற்றுகின்றனர்.
நாட்டின் அனைத்து துறைகளிலும், பெண்கள் வேலைவாய்ப்பை பெற்று வருகின்றனர்.அதில், மிகவும் சவாலான துறையான ரயில்வே துறையில், இன்ஜின் உதவி டிரைவராக, பணியாற்றும் பெண்களின் எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது.
குறிப்பாக, கடந்த, 15 ஆண்டுகளுக்கு முன், ஐந்து பேர் மட்டும் இருந்தனர். ஆனால், சமீபத்தில் இந்திய அளவில் எடுக்கப்பட்ட, கணக்கெடுப்பின்படி, உதவி ரயில் இன்ஜின் டிரைவர்கள் பணியில், 1,280 பெண்கள் உள்ளனர்.
இதுகுறித்து, ரயில்வே வாரிய அதிகாரிகள் கூறியதாவது: லோகோ பைலட் பணி என்பது மிகவும் சவாலானது. அதில், பணியாற்றுகிறவர்களுக்கு ஆண்டுக்கு, இரண்டு முறை கட்டாயம், மருத்துவ தகுதி சான்று என்பது மிகவும் முக்கியம். உடல் நல்ல நிலையில் இருந்தால் மட்டும், இன்ஜின்களை கையாள முடியும். காரணம், இன்ஜின்களில் செல்லும் போது, அதிர்வு காரணமாக ரத்த அழுத்தம், அதிகரிக்க வாய்ப்புள்ளது.
மேலும், கண் முன் நிகழும் தற்கொலை சம்பவம், கழிப்பிட வசதி உள்ளிட்ட சில பிரச்சனை காரணமாக பெண்கள், இந்த வேலைக்கு வர விரும்ப மாட்டர். இருப்பினும், சமீபத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி உத்திரபிரதேசம், 216, கேரளா, 145, ஆந்திரா, 134, பீகார், 122, மகாராஷ்ட்டிரா, 117, மேற்கு வங்காளம், 110, ராஜஸ்தான், 71, ஜார்கண்ட், 70, மத்திய பிரதேசம், 53, தமிழகம், 43, சட்டீஸ்கார், 41, ஒடிசா, 37, தெலுங்கானா, 33, அரியானா, 26, டில்லி, 20, கர்நாடகா, 12, உத்திரகாண்ட், 8, பஞ்சாப், 7, குஜராத், 5, அசாம், 5, இமாச்சல பிரதேசம், புதுச்சேரியில் தலா, 2 மற்றும் ஜம்மு காஷ்மீரில், 1 என, 1,280 பெண்கள் ரயில்வே இன்ஜின் உதவி டிரைவராக பணி யாற்றி வருகின்றனர்.
இவர்கள் அனைவரும், சண்டிங் இன்ஜின் மற்றும் குறுகிய துாரம் செல்லும் ரயிலில் பணியாற்றுகின்றனர். நீண்ட துாரம் செல்லும் ரயில்களில், பெண்கள் பணியாற்ற அனுமதிக்கப்படவில்லை,
இவ்வாறு, அவர்கள் தெரிவித்தனர்.
மேலும்
-
தங்கம் வென்றார் சுருச்சி: உலக துப்பாக்கி சுடுதலில்
-
கொண்டாட்டத்தால் பறிபோன தங்கம்: நிதின் குப்தா ஏமாற்றம்
-
ஷைலி சிங் நம்பிக்கை
-
மணிகா, ஸ்ரீஜா ஏமாற்றம்: உலக டேபிள் டென்னிசில்
-
சிறைச்சாலை முன் கார்களுக்கு தீ வைப்பு: பிரான்சில் மர்ம நபர்கள் தாக்குதல்
-
முதல்வரின் பதிலை கேட்கும் மக்களின் காதுகள் பாவமில்லையா: இ.பி.எஸ்., விமர்சனம்