ரயிலில் நகை பறித்த ஆசாமி கைது


ரயிலில் நகை பறித்த ஆசாமி கைது


ஈரோடு:சென்னையை சேர்ந்தவர் ஜெயந்தி. கடந்த மார்ச், 1ல் கணவருடன் சென்னை - கோவை இன்டர்சிட்டி ரயிலில் பயணித்தார். ஈரோடு அருகே வந்தபோது, அவர் அணிந்திருந்த எட்டு பவுன் சங்கிலிகளை ஒருவர் பறித்து சென்றார். கடந்த மார்ச், 30ல் மதுரையை சேர்ந்த லாவண்யா, மங்களுரு - சென்னை வெஸ்ட்கோஸ்ட் ரயிலில் பயணித்தபோது, சங்ககிரி-பொம்மிடி இடையே, 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர் பறித்து சென்றார். இது தொடர்பாக ஈரோடு ரயில்வே இன்ஸ்பெக்டர் பிரியா ஷாய்ஸ்ரீ தலைமையிலான போலீசார், குற்றவாளியை தேடி வந்தனர். இந்நிலையில் ஆந்திர மாநிலம் சித்துார் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன், 40, என்பவரை கைது செய்தனர். உருக்கிய நிலையில் வைத்திருந்த இரு வழக்கில் தொடர்புடைய தங்கத்தை பறிமுதல் செய்தனர்.

Advertisement