பலா, முந்திரிக்கு புவிசார் குறியீடு

கடலுார்:பண்ருட்டி முந்திரி, பலாப்பழத்திற்கு மத்திய அரசின் புவிசார் குறியீடு கிடைத்துள்ளது.

தமிழ்நாடு முந்திரி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் பல ஆண்டு முயற்சி காரணமாக, தற்போது பண்ருட்டி முந்திரி, புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதனால் வெளிநாடுகளுக்கான ஏற்றுமதியை அதிகரிக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதேபோல, கடலுார் மாவட்டத்தில் விளையும் பலா, தமிழகம் முழுதும் விற்பனையாகிறது. இதற்கும் மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளது.

பண்ருட்டியில் இரு பொருட்களுக்கு புவிசார் குறியீடு பெறப்பட்டுள்ளதால், அப்பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

Advertisement