மாணவிக்கு தொல்லை கொடுக்க முயன்ற பூஜாரிக்கு கத்திகுத்து
திருநெல்வேலி:திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளத்தைச் சேர்ந்தவர் கணேசன் 53. இவர் அங்குள்ள சிவன்கோயிலில் பூஜாரியாக உள்ளார்.
இவரை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் கத்தியால் குத்தினார். காயமுற்ற கணேசன் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரியில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டார். முன்னீர்பள்ளம் போலீசார் அவரிடம் விசாரித்தனர்.
கத்தியால் குத்திய நபருக்கு பிளஸ் 1 பயிலும் மகள் உள்ளார். அந்த மாணவிக்கு பூஜாரி கணேசன் பாலியல் தொல்லை கொடுக்க முயற்சித்துள்ளார். இதை அறிந்து ஆத்திரமுற்ற அந்த நபர் பூஜாரியை கத்தியால் குத்தியது தெரிய வந்தது. மாணவி தந்தை மீது வழக்கு பதிவு செய்த போலீசார், பூஜாரி மீதும் போக்சோ பிரிவில் வழக்கு பதிவு செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் முழுமையாக குடிநீர் வினியோகம் செய்ய மக்கள் எதிர்பார்ப்பு
-
சேத்துாரில் வெட்டப்படும் சாலையோர மரங்கள்
-
பாதுகாப்பு விழிப்புணர்வு
-
மாந்தோப்பு பேராலி ரோடு சேதம் வாகனங்கள் செல்ல சிரமம்
-
காரியாபட்டி போலீஸ் ஸ்டேஷன் வளைவில் போக்குவரத்து நெரிசல் விபத்து அச்சத்தில் வாகன ஓட்டிகள்
-
திறந்தவெளி கிணற்றால் அபாயம்
Advertisement
Advertisement