பாதுகாப்பு விழிப்புணர்வு

விருதுநகர்: விருதுநகர் ரயில்வே போலீசார் சார்பில் பெண் பயணிகளுக்கான பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

இதற்காக பிரத்யேக குழு அமைக்கப்பட்டுஉள்ளது. பயணத்தின் போது பெண் பயணிகளுக்கு இடையூறுகள், அசவுகரியங்கள் ஏற்பட்டால் 1512 அல்லது 99625 00500 ஆகிய எண்களில் புகார் தெரிவிப்பது, காவல் உதவி செயலியை பயன்படுத்துவது உள்ளிட்ட பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டன.

Advertisement