காமராஜர் நகர் தொகுதி இ.கம்யூ., கட்சி கூட்டம் 

புதுச்சேரி: மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வலியுறுத்தி போராட்டம் நடத்துவது என, இந்திய கம்யூ., முடிவு செய்துள்ளது.

இந்திய கம்யூ., காமராஜர் நகர் தொகுதிக் குழு கூட்டம், சித்தன்குடி, இந்திரஜித் குப்தா படிப்பகத்தில் நடந்தது. பொருளாளர் பிரகாஷ் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் துரை செல்வம் தொகுதியில் நடைபெற்ற வேலைகள் குறித்து பேசினார்.

மாநில செயலாளர் சலீம் மாநில அரசியல், உறுப்பினர் சேர்ப்பு மற்றும் எதிர்கால கடமைகள் குறித்து பேசினார். இ.கம்யூ., மூத்த தலைவர் விஸ்வநாதன் உட்பட பலர் பங்கேற்று பேசினர்.

கூட்டத்தில், ஏப்ரல் மாத இறுதியில் சாலை சீரமைத்தல், சுத்தமான குடிநீர், தினசரி குப்பைகளை அகற்றுவது, கொசுத்தொல்லை கட்டுப்படுத்துவது உள்ளிட்ட பிரச்னைகளை முன்வைத்து தெருமுனை பிரசாரம் நடத்துவது என முடிவு செய்யப்பட்டது.

லெனின் நகர், சாமிபிள்ளைத்தோட்டம் பகுதியில் சுத்தமான குடிநீர் வழங்கவும், லெனின் நகரில் நீண்ட காலமாக வசிக்கும் மக்களுக்கு மனைப்பட்டா வழங்கவும் அரசை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டது.

துணை செயலாளர் தயாளன், உறுப்பினர்கள் ஞானசங்கர், மாதவராமன், சரவணன், மோகன்தாஸ், சந்திரகுமார், சூரி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement