ஆபாசமாக பேசிய வாலிபர் கைது

புதுச்சேரி: ஆபாசமாக பேசிய வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மங்கலம் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து சென்றனர். மங்கலம் - உறுவையாறு சாலையில் வாலிபர் ஒருவர் நின்று கொண்டு அவ்வழியாக செல்லும் பொதுமக்களிடம் ஆபாசமாக பேசினர்.

போலீசார் அந்த வாலிபரை பிடித்து விசாரித்தனர். அவர், மங்கலம் கணபதி நகரைச் சேர்ந்த ராம்குமார் 24, என்பது தெரியவந்தது. அவர் மீது வழக்குப்பதிந்து கைது செய்தனர்.

Advertisement