மத்திய அரசை கண்டித்து த.வெ.க., ஆர்ப்பாட்டம்

விழுப்புரம்: மத்திய அரசின் வக்ப் வாரிய சட்ட திருத்தத்தை திரும்ப பெற வலியுறுத்தி, த.வெ.க., சார்பில் விழுப்புரத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

நகராட்சி திடலில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு தெற்கு மாவட்ட செயலாளர் மோகன்ராஜ் தலைமை தாங்கி பேசினார். இணைச் செயலாளர் காளிதாஸ், பொருளாளர் சுரேஷ், துணைச் செயலாளர் சுமன் முன்னிலை வகித்தனர்.

ஒன்றிய செயலர்கள் கோபு, கிருஷ்ணா, மைக்கேல், நகர செயலாளர்கள் முபாரக், வெங்கட், இளையராஜா, இளைஞரணி விக்கி, இர்பான், மாணவரணி விஜய், மகளிரணி பிரேமா, சாந்தி, ராபியாபேகம் உள்ளிட்ட கட்சியினர் பங்கேற்றனர்.

ஆர்ப்பாட்டத்தில், வக்பு வாரிய சட்ட திருத்தத்தை மேற்கொண்டுள்ள மத்திய அரசை கண்டித்தும், முஸ்லிம் மக்களுக்கு எதிராக வக்ப் சட்டத்தில் திருத்தம் மேற்கொண்டு, நிறைவேற்றியுள்ள புதிய சட்ட மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தியும் பேசினர்.

கோட்டக்குப்பம்



கோட்டக்குப்பம் தபால் நிலையம் எதிரே கிழக்கு மாவட்ட செயலாளர் சுரேஷ் தலைமை தாங்கினார். மாவட்ட இணைச் செயலாளர் ராஜ், செயற்குழு உறுப்பினர் கபாலி, நகர நிர்வாகி முகமது கவுஸ் முன்னிலை வகித்தனர். பொருளாளர் பிரவீன்ராஜ், துணைச் செயலாளர்கள் வேந்தன், கெங்கம்மாள் பாஸ்கர், செயற்குழு உறுப்பினர்கள் விஜயகுமார், அரவிந்த், தினேஷ், குறளரசன், ஒன்றிய நிர்வாகிகள் முருகையன், ராஜா, ஜான், கார்த்தி, ஸ்டீபன், ஜெய், ரவி, பார்த்திபன், ராமமூர்த்தி, உட்பட பலர் பங்கேற்றனர்.

திண்டிவனம்



வடகிழக்கு மாவட்ட த.வெ.க., சார்பில் திண்டிவனம் தலைமை தபால் நிலையம் எதிரில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் சக்திவேல் தலைமை தாங்கினார். நகர செயலாளர் வேந்தன், நிர்வாகிகள் முத்துராஜ், தினேஷ், சுமன்ராஜ், மதன்ராஜ், ரியாஸ், நாசர் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

விக்கிரவாண்டி



தென்மேற்கு மாவட்டம் சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு, மாவட்ட செயலாளர் வடிவேல் தலைமை தாங்கினார். இணைச் செயலாளர் ரமேஷ், துணைச் செயலாளர் காமராஜ், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் பிரித்திவிராஜ், மகளிர் அணி அமைப்பாளர் மனோரஞ்சிதம், உறுப்பினர் சேர்க்கை மாவட்ட செயலாளர் மணி, வழக்கறிஞர் அணி செயலாளர் குமரேசன், ஒன்றிய செயலாளர்கள் சேகர், பாரதி, மணிராஜன், முத்து, ஜான் பீட்டர், நகர செயலாளர் சிவக்குமார் உட்பட கட்சி நிர்வாகிகள் பலர் பங்கேற்றனர்.

Advertisement