ரயில் தண்டவாளம் அருகே உடல்: போலீஸ் விசாரணை

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி அருகே ரயில் தண்டவாளம் அருகே இறந்து கிடந்த நபர் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
விக்கிரவாண்டி அடுத்த முண்டியம்பாக்கம் சர்க்கரை ஆலை பின்புற ரயில் பாதையில் நேற்று காலை 8:00 மணிக்கு, ஒருவர் இறந்து கிடப்பதாக ரயில்வே போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
சம்பவ இடத்திற்கு வந்த செங்கல்பட்டு ரயில்வே போலீசார், உடலை கைப்பற்றி விசாரணை நடத்தினர். அதில், இறந்த நபர் கன்னியாகுமரி அடுத்த அழகாபுரம் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் செல்சன், 34; என்பதும், நேற்று நாகர்கோவிலில் இருந்து தாம்பரத்திற்கு ரயிலில் சென்றது தெரியவந்தது.
ஆனால், அவர் எந்த ரயிலில் பயணித்தார், தற்கொலை செய்து கொள்ள ரயிலில் இருந்து குதித்தாரா, தவறி விழுந்து இறந்தரா, யாரேனும் கீழே தள்ளி கொலை செய்தார்களா என விசாரணை நடத்தி வருகின்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
-
காதல் மனைவியை மீட்டு தர எஸ்.பி.,யிடம் தொழிலாளி புகார்
Advertisement
Advertisement