மாற்றுத் திறனாளிகளுக்கு இருக்கை வசதி ஏற்பாடு
விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் மாற்றுத் திறனாளிகளின் கோரிக்கையை ஏற்று இருக்கை வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்ட சிகரம் மாற்றுத் திறனாளிகள் சங்கம் சார்பில் தாலுகா அலுவலகத்திற்கு வரும் மாற்றுத் திறனாளிகள் அமர இருக்கை வசதி ஏற்படுத்த வேண்டுமென சங்கத் தலைவர் சுந்தரராசு கோரிக்கை விடுத்தார். அதனையேற்று, தாசில்தார் யுவராஜ் நேற்று காலை தாலுகா அலுவலகத்தின் முன்புறம் மாற்றுத்திறனாளிகள் அமரும் வகையில் இருக்கை வசதிகளை ஏற்படுத்தியுள்ளார்.
மண்டல துணை தாசில்தார் தட்சணாமூர்த்தி, தனி தாசில்தார் பாரதிதாசன், வருவாய் ஆய்வாளர் தயாநிதி, உதவியாளர்கள் அரவிந்த், செந்தில்குமார், மாற்றுத்திறனாளி சங்க துணைச் செயலாளர் முருகன், இளைஞர் அணி தணிகைவேல், முருகன் சுபாஷ் நகர செயலாளர் அண்ணாமலை உள்ளிட்ட மாற்றுத்திறனாளிகள் பங்கேற்றனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
-
காதல் மனைவியை மீட்டு தர எஸ்.பி.,யிடம் தொழிலாளி புகார்
Advertisement
Advertisement