திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம்

கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் மடவிளாகம் அரசமரத்தடி விநாயகர், கெங்கையம்மன், திரவுபதி அம்மன் கோவில் கும்பாபிஷேகம் விழா நேற்று நடந்தது.
அதனையொட்டி, நேற்று முன்தினம் கணபதி பூஜை, முதலாம் கால யாக சாலை பூஜையுடன் துவங்கியது. நேற்று காலை 7:00 மணிக்கு இரண்டாம் கால யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து, காலை 9:30 மணிக்கு கடம் புறப்பாடு துவங்கியது. பின் அரசமரத்தடி விநாயகர், கெங்கையம்மன், திரவுபதியம்மன் கோவில்களுக்கு கும்பாபிஷேகம் நடந்தது.
விழாவில் கண்டாச்சிபுரம், புதுப்பாளையம், வீரங்கிபுரம், சித்தாத்துார், நல்லாப்பாளையம், மேல்வாலை உள்ளிட்ட பகுதி பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். இரவு உற்சவ மூர்த்தி வீதியுலா நடந்தது.
ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் ஊர்பொதுமக்கள் செய்தனர்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
மேலும்
-
கனடாவில் இந்தியர் கத்தியால் குத்திக்கொலை
-
மாநிலத்தில் பரவலாக பெய்த கனமழை: கோடை வெப்பம் தணிந்ததால் மக்கள் மகிழ்ச்சி
-
போலீசிடம் தப்பிக்க முயற்சி; ரவுடிக்கு கால் எலும்பு முறிவு
-
ரவுடி சகோதரர்கள் குண்டாசில் கைது
-
சப் இன்ஸ்பெக்டரை கொலை செய்ய முயற்சி; பண்ருட்டி அருகே ரவுடி உள்ளிட்ட 4 பேர் கைது
-
காதல் மனைவியை மீட்டு தர எஸ்.பி.,யிடம் தொழிலாளி புகார்
Advertisement
Advertisement