விதிமீறி இயங்கிய ஆட்டோக்கள் பறிமுதல்

விழுப்புரம்: விழுப்புரத்தில் விதிமீறி இயங்கிய ஆட்டோக்களை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்தனர்.

விழுப்புரம் நகரில் விதிகளை மீறி ஆட்டோக்கள் இயங்குவதும், சாலையில் நிறுத்தி பயணிகளை ஏற்றி, இறக்கிச் செல்லும் ேஷர் ஆட்டோக்களால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது என்பது போன்ற தொடர் புகார்களையடுத்து, விழுப்புரம் போக்குவரத்து போலீசார், சப் இன்ஸ்பெக்டர்கள் குமாரராஜா, விஜயரங்கன் தலைமையில் நேற்று காலை வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அப்போது, ரயில்வே பஸ் நிறுத்தம், காந்தி சிலை, சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் விதிமீறி ஆட்டோ பர்மிட்டில் ஷேர் ஆட்டோக்களாக இயங்கிய 3 ஆட்டோக்களை பறிமுதல் செய்து, வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

தொடர்ந்து, விதிமீறி இயங்கும் ஆட்டோ, ஷேர் ஆட்டோக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து போலீசார் எச்சரித்துள்ளனர்.

Advertisement