லாக்கப் மரண வழக்கு; போலீசார் 9 பேருக்கு ஆயுள்!

தூத்துக்குடி: தூத்துக்குடியில் போலீஸ் ஸ்டேசனில் விசாரணை கைதி மரணமடைந்த வழக்கில், டி.எஸ்.பி., உள்ளிட்ட 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது.
தூத்துக்குடியில் கடந்த 1999ம் ஆண்டு வெடிகுண்டு வழக்கு தொடர்பாக, வின்சென்ட் என்பவரை தாளமுத்து நகர் போலீசார் கைது செய்தனர். விசாரணை கைதியாக போலீஸ் ஸ்டேசனில் இருந்த நிலையில் அதே ஆண்டு செப்., 18 ல் மர்மமான முறையில் உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
25 ஆண்டுகளுக்கு பிறகு 2024 ஜூன் மாதம் தூத்துக்குடி மாவட்ட அமர்வு நீதிமன்றம் எண் 1ல் இந்த வழக்கு விசாரணைக்குஎடுத்துக் கொள்ளப்பட்டது. 13 சாட்சிகளிடம் விசாரணை நடந்தது, 38 ஆவணங்கள் ஆய்வு செய்யப்பட்ட நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது.
இன்று தீர்ப்பு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட நீதிமன்றம் எண் 1 நீதிபதி தாண்டவன், குற்றம்சாட்டப்பட்ட 11 போலீசாரில் பேரில் இரண்டு பேரை விடுவித்தார். மற்ற 9 போலீசாருக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை பெற்ற ராமகிருஷ்ணன் என்பவர் தற்போது ஸ்ரீவைகுண்டம் டி.எஸ்.பி., ஆக உள்ளார். மற்றொருவர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருகிறார். மற்றவர்கள் ஓய்வு பெற்று விட்டனர்.






மேலும்
-
கேரளாவில் பேசும் பொருளான எருமை மாடு; காரணம் என்ன?
-
பா.ஜ.,வின் நல்லாட்சியை பார்க்கும் மக்கள்: பிரதமர் மோடி பெருமிதம்
-
பாம்பன் பாலம் திறப்பு விழாவை முன்னிட்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்து மதுரை ஆதீனம் வீடியோ வெளியீடு
-
கூடுதல் வரி விதிப்பு எதிரொலி: அமெரிக்காவுக்கு ஏற்றுமதியை நிறுத்திய ஜாகுவார்!
-
பு துச் சேரி ஆற்றில் படகு கவிழ்ந்தது சுற்றுலா பயணிகள் 10 பேர் உயிர் தப்பினர்; புதுச்சேரியில் பரபரப்பு
-
பைக்கில் மதுபாட்டில் கடத்தியவர் கைது