தணிக்கை உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு

சேலம்:தமிழகத்தில் கூட்டுறவு தணிக்கை அலுவலர்கள், 17 பேர், உதவி இயக்குனர்களாக பதவி உயர்வு பெற்றுள்ளனர்.

சேலம் உதவி இயக்குனர் அலுவலக தணிக்கை அலுவலர் ஜெகஜோதி, சேலம் ஜவ்வரிசி உற்பத்தியாளர் தொழிற்கூட்டுறவு சங்க, தணிக்கை உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.

அதேபோல் ஈரோடு ஆலடி பெருமாள், உதகமண்டலம்; தர்மபுரி வேலுசாமி, துாத்துக்குடி மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி; திருவண்ணாமலை மணி, தஞ்சாவூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி; திருவண்ணாமலை செல்வபாண்டியன், கும்பகோணம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி; வேலுார் காளியப்பன், மதுரை சரகத்துக்கு தணிக்கை உதவி இயக்குனராக சென்றுள்ளனர்.

இவர்கள் உட்பட, 17 பேருக்கு பதவி உயர்வில் இடமாறுதல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

Advertisement