வக்ப் திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி முர்மு ஒப்புதல்

புதுடில்லி: பார்லிமென்டின் இரு சபைகளிலும் நிறைவேற்றப்பட்ட வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்று ஒப்புதல் அளித்தார்.
வக்ப் வாரிய சட்டங்களில் பல ஆண்டுகளுக்குப் பின் மத்திய அரசு பல்வேறு திருத்தங்களை மேற்கொண்டது. இதன் அடிப்படையில் தாக்கல் செய்யப்பட்ட வக்ப்சட்டத்திருத்த மசோதா, லோக்சபா மற்றும் ராஜ்யசபாவில் சமீபத்தில்நிறைவேறியது.
இரு சபைகளிலும், பல மணி நேர காரசார விவாதத்திற்கு பின் ஓட்டெடுப்பு நடத்தி மசோதா நிறைவேற்றப்பட்ட நிலையில் வக்ப் சட்டத்திருத்த மசோதாவுக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது.
இந்நிலையில் இந்த மசோதாவுக்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு நேற்றிரவு ஒப்புதல் அளித்தார். இதையடுத்து இந்த மசோதா சட்டமாகி நடைமுறைக்கு வருகிறது. இதற்கிடையே வக்பு சட்டத்திருத்த மசோதாவுக்கு எதிராக காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சியினர் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.











