டாஸ்மாக் பணியாளர் சங்க செயற்குழு கூட்டம்

கடலுார்: கடலுாரில், தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் மத்திய செயற்குழு கூட்டம், தமிழ்நாடு அரசு பணியாளர் சங்க அலுவலகத்தில் நடந்தது.

மாநில தலைவர் சரவணன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் கோதண்டம் முன்னிலை வகித்தார். மாவட்டத் தலை வர் அல்லிமுத்து வரவேற்றார். மாநில செயல் தலைவர் பழனிபாரதி, மாநில நிர்வாகிகள் மரகதலிங்கம், சுரேஷ், இளங்கோ, அருணகிரி முருகன், மாவட்ட நிர்வாகிகள் பாலமுருகன், ராஜா கருத்துரையாற்றினர்.

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கத்தின் சிறப்பு தலைவர் பாலசுப்ரமணியன், சிறப்புரையாற்றினார். தமிழ்நாடு அரசு பணியாளர் சங்கத்தின் மாநில இணை பொதுசெயலாளர் சிவக்குமார் வாழ்த்திப் பேசினார்.

டாஸ்மாக் பணியாளர்களின் பணிநிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட 20அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, ஏப்.10ம் தேதி மாநிலம் முழுதும் மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் செய்வது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மாநில பொருளாளர் ஜெய்கணேசன் நன்றி கூறினார்.

Advertisement