வரத்தின்றி குறையும் ஆத்துார் நீர்த்தேக்கம்; நீர்பிடிப்பு பகுதியில் மழையில்லாததால் ஏமாற்றம்

ஆத்துார் : மாவட்டத்தில் பரவலாக சாரல் மழை பெய்தபோதும் நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கத்தில் தண்ணீர் மட்டம் குறைந்து வருகிறது.

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியான சித்தரேவு, பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, மணலுார், புல்லாவெளி பகுதியில் சில வாரங்களாக வெயிலின் தாக்கம் அதிகரிக்க துவங்கியது. நீர்பிடிப்பு பகுதியாக கொண்ட ஆத்துார் காமராஜர் நீர்த்தேக்கம் 2024ல் 5 முறை நிரம்பி மறுகால் சென்ற நிலையில் தற்போது தண்ணீர் வரத்தின்றி நீர் மட்டமும் குறைந்து வருகிறது . கூழையாறு, சிற்றாறுகளிலும் நீர்வரத்து குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. சில நாட்களாக பரவலாக சாரல் மழை பெய்தும் காமராஜர் நீர்த்தேக்க நீர்பிடிப்பு பகுதியில் மழையின்றி நீர்மட்டமும் குறைந்துள்ளது. நேற்றைய நிலவரப்படி 18.8 (24)அடியாக இருந்தது.

Advertisement