கொழும்பில் இந்திய அமைதிப்படை நினைவிடத்தில் பிரதமர் மரியாதை

2


கொழும்பு: இலங்கை சென்ற பிரதமர் மோடி, கொழும்புவில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவு ஸ்தூபியில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

Latest Tamil News
கடந்த 1987 முதல் 1990 வரையில் இலங்கையில் அமைதி காக்கும் பணிக்காக இந்திய ராணுவத்தின் அமைதிப்படை யாழ்ப்பாணத்தில் செயல்பட்டு வந்தது. அப்போது, விடுதலைப் புலிகளுடன் ஏற்பட்ட மோதலில் உயிரிழந்த இந்திய வீரர்கள் நினைவாக, இலங்கை பார்லிமென்ட் அருகே நினைவிடம் அமைக்கப்பட்டு உள்ளது.
Latest Tamil News
இந்நிலையில், இலங்கை சென்றுள்ள பிரதமர் மோடி, இந்த நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.


Latest Tamil News
இது தொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: கொழும்பில் உள்ள இந்திய அமைதிப்படையினரின் நினைவுத் ஸ்தூபியில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினேன். இலங்கையின் ஒருமைப்பாடு, அமைதி மற்றும் சமாதானம் ஆகியவற்றுக்கான உயர்பணியில் தமது வாழ்வை தியாகம் செய்த இந்திய அமைதிகாக்கும் படையின் துணிச்சல் மிக்க வீரர்களை இச்சந்தர்ப்பத்தில் நாம் நினைவுகூர்கிறோம்.

Latest Tamil News
அவர்களின் அசைக்க முடியாத தைரியமும், அர்ப்பணிப்பும் நம் அனைவருக்கும் உத்வேகத்தின் ஆதாரமாக நிலைத்திருக்கின்றன. இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் மோடி கூறியுள்ளார்.

கிரிக்கெட் மூலமான பிணைப்பு!



Latest Tamil News

தொடர்ந்து, 1996ல் உலகக்கோப்பை கிரிக்கெட் தொடரில் கோப்பை வென்ற இலங்கை அணி வீரர்கள் பிரதமர் மோடியை சந்தித்தனர்.
Latest Tamil News
இது தொடர்பாக பிரதமர் மோடி வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது: 1996 உலகக் கோப்பையை வெற்றிகொண்ட அன்றைய இலங்கை கிரிக்கெட் அணியின் வீரர்களுடன் கலந்துரையாடியதில் மகிழ்ச்சி அடைகிறேன். இந்த அணியினர் எண்ணற்ற விளையாட்டு ரசிகர்களது மனதைக் கவர்ந்திருந்தனர்! இவ்வாறு அந்த அறிக்கையில் பிரதமர் கூறியுள்ளார்.
Latest Tamil News

Advertisement