கேரளாவில் பேசும் பொருளான எருமை மாடு; காரணம் என்ன?

திருவனந்தபுரம்: கேரளாவில் 10 வயதான ''குமாம் காளி'' எருமை மாடு அனைவரது
கவனத்தை ஈர்த்துள்ளது.
கேரளா மாநிலம் திருச்சூரில் 5 அடி 7 அங்குலம் கொண்ட, எருமை மாடு ராஜ உபசரிப்புடன் வளர்க்கப்பட்டு இருக்கிறது. இந்த மாட்டிற்கு ''குமாம் காளி'' என பெயர் சூட்டப்பட்டுள்ளது. இந்த ''குமாம் காளி'' மாட்டினை திருச்சூர் காட்டூர் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் ஷானவாஸ் அப்துல்லா வளர்த்து வருகிறார்.
முர்ரா இனத்தை சேர்ந்த இந்த எருமை மாடு ''குமாம் காளி'' யை இரண்டரை ஆண்டுகளுக்கு முன்னர், பஞ்சாபில் இருந்து வாங்கி வந்துள்ளார். காளை வளர்ப்பில் ஆர்வம் கொண்டவர் அப்துல்லா. கேரளாவில் மிக பிரபலமான மாடுகளை வளர்த்து வந்துள்ளார்.
இதன் பின்னர், ஹரியானா, பஞ்சாப் மாநிலத்தில் மிக பிரபலமான எருமை மாடுகளை தேடி உள்ளார். அப்துல்லா. அப்போது தான், அவர் பஞ்சாப் மாநிலத்தில் காளி என்ற எருமை மாட்டின் குட்டி ''குமாம் காளி'' குறித்து அறிந்துள்ளார்.பின்னர் மிக அதிக தொகை கொடுத்து, குமாம் காளியை அப்துல்லா வாங்கி வந்துள்ளார்.
இது குறித்து, மாடு உரிமையாளர் அப்துல்லா கூறியதாவது: குமாம் காளி வயது 10. நிறைய சாம்பியன்ஸ் சிப் போட்டிகளில் குமாம் காளி வெற்றி பெற்று அசத்தி உள்ளது. தினமும் மூன்று வேளை 2 கி.மீட்டர் 'வாங்கிங்' அழைத்து செல்வோம். தினமும் 30 முதல் 40 லிட்டர் தண்ணீர் குடிக்கும். 40 முதல் 50 கிலோ புல் உட்கொள்ளும்.
கால்நடை டாக்டர் ஆலோசனை படி பல்வேறு வகையான தினமும் 4 முறை தேங்காய் புண்ணாக்கு, சோளம் உள்ளிட்டவை கொடுப்போம். குமாம் காளியை இருவர் பார்த்து கொள்ள வேலைக்கு சேர்த்து உள்ளேன். குமாம் காளிக்கு எண்ணெய் மஜாஜ் வழங்கப்படுகிறது. இவ்வாறு அவர் கூறினார்.
அப்துல்லாவின் மாடு வளர்க்கும் ஆர்வத்தை அவரது தாயார், மனைவி, குழந்தைகள் 3 பேர் முழு மனதுடன் வரவேற்கின்றனர்.
