ஏர்போர்ட் சுங்கத்துறை முதன்மை கமிஷனர் மாற்றம்

சென்னை,சென்னை விமான நிலையத்தில், சுங்கத்துறை முதன்மை கமிஷனராக ராமவத் ஸ்ரீனிவாச நாயக், 2023, அக்., மாதம் நியமிக்கப்பட்டார். அவரது பணி காலம் முடிந்ததை அடுத்து, வட சென்னை ஜி.எஸ்.டி., பிரிவு முதன்மை கமிஷனராக மாற்றப்பட்டுள்ளார்.

அவருக்கு பதிலாக, டில்லி விமான நிலையத்தில் சுங்கத்துறை கமிஷனராக பணிபுரிந்த தமிழ்வளவன், சென்னை விமான நிலைய சுங்கத்துறை புதிய முதன்மை கமிஷனராக நியமிக்கப்பட்டுள்ளார்.

என்.ஏ.சி.ஐ டி., நார்கோடிக்ஸ் என்ற மத்திய சுங்கம் மற்றும் மறைமுக வரிகள் நார்கோட்டிக்ஸ் அகாடமி சென்னை பிரிவில், கூடுதல் இயக்குநர் ஜெனரல் பொறுப்பிலும், தமிழ்வளவன் இருந்துள்ளார்.

சென்னை விமான நிலைய சுங்கத்துறை பிரிவில் பணிபுரிந்த, மற்ற கூடுதல் கமிஷனர்கள் உட்பட பலர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இந்த இடமாற்றம், வழக்கமானதுதான் என, அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement