விளையாட்டு மையத்தில் சேர மே 2ல் மாநில தேர்வு போட்டி
சென்னை, விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் சேருவதற்கான, மாநில தேர்வு போட்டி அறிவிக்கப்பட்டுள்ளது.
பள்ளி மாணவ - மாணவியர் விளையாட்டு துறையில் சாதனை படைக்க, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ், ஆறு இடங்களில், முதன்மை நிலை விளையாட்டு மையங்கள் செயல்படுகின்றன.
இம்மையங்களில் சேர்க்கைக்கான விண்ணப்பம், நேற்று முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
ஆறாம் முதல் எட்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள், இம்மையத்தில் சேர விரும்பினால், ஆன்லைனில், இம்மாதம், 30ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பித்த மாணவ - மாணவியருக்கான மாநில தேர்வு போட்டிகள், மே 2ம் தேதி, காலை 7:00 மணிக்கு நடக்கிறது.
மேற்கண்ட நாளில், சென்னை நேரு விளையாட்டு அரங்கில், இருபாலருக்கான தடகளம், ஆண்களுக்கான குத்துச்சண்டை மற்றும் பளுதுாக்குதல்; சென்னை நுங்கம்பாக்கம் டென்னிஸ் அரங்கில் பெண்களுக்கான டென்னிஸ்; வேளச்சேரி நீச்சல் குளத்தில் இருபாலர் ஜிம்னாஸ்டிக்ஸ் மற்றும் நீச்சல் தேர்வுகள் நடக்கின்றன.
அதேபோல், செங்கல்பட்டு, மேலக்கோட்டையூரில் உள்ள தமிழ்நாடு உடற்கல்வியில் பல்கலையில், ஆண்களுக்கான வில்வித்தை, இருபாலருக்கான சைக்கிளிங் மற்றும் இறகு பந்து போட்டி தேர்வுகள் நடக்கின்றன.
விபரங்களுக்கு, 951400 0777 என்ற எண்ணில் தொடர்புக் கொள்ளலாம் என, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் தெரிவித்துள்ளது.
மேலும்
-
மணிப்பூர் கலவரத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம்: மத்திய அரசு ரூ.217 கோடி ஒதுக்கீடு
-
உலகமயமாதல் சகாப்தம் நிறைவு; அறிவிக்கிறார் பிரிட்டன் பிரதமர்
-
கர்நாடகாவில் கார் கூரை, கதவில் தொற்றியபடி ஆபத்தான பயணம்: 7 பேர் மீது வழக்குப்பதிவு
-
ஒடிசா மணற்சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக்கிற்கு சர்வதேச விருது
-
7000 கிராமங்களில் விதவைகளுக்கு விடிவுகாலம்: மஹாராஷ்டிராவில் ஏற்பட்ட சமூக மாற்றம்
-
மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்தேனா? சீமான் விளக்கம்