பஸ்சில் முன்பதிவு 13 பேருக்கு பரிசு

சென்னை,அரசு பேருந்துகளில், முன்பதிவு செய்து பயணிப்போரை ஊக்குவிக்கும் வகையில் பரிசளிக்கும் திட்டம், கடந்த ஆண்டு ஜன., மாதம் முதல் உள்ளது. 13 பயணியருக்கு குலுக்கல் முறையில் பரிசு தொகை வழங்கப்படுகிறது.

இதில், முதல் மூன்று பயணியருக்கு தலா 10,000 ரூபாய், இதர 10 பயணியருக்கு தலா 2,000 ரூபாய் என 50,000 ரூபாய் அளவில் பரிசுத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில், கடந்த மாதத்திற்கான 13 வெற்றியாளர்களை, கணினி குலுக்கல் முறையில், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு நிர்வாக இயக்குனர் பிரபுசங்கர் தேர்வு செய்தார். தேர்வானவர்களுக்கு விரைவில் பரிசு வழங்கப்படும் என, போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement